கவிதையோடு வரும் கவலை என்ன இலவச இணைப்பா?
by satheesh[ Edit ] 2010-02-05 17:32:24
உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!
விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!
இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!
உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!
நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்
எப்போதோ பார்த்த உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்
சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்
சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?
பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!
கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?
காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்
நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.