2009-ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரு பார்வை !
* உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக் குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக் காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப் பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.
* இந்தியாவில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எ வேல்யூ செர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது.
* கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டில் இந்தியா- துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது.
* உலக கோடீஸ்வரர்கள் பட்டியலைத் தொடர்ந்து உலகிலுள்ள பிரம்மாண்ட மான தொழிற்சாலைகள் பட்டியலை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2000 ஆலைகள் இதில் இடம் பெற் றுள்ளன. அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த 48 தொழிற்சாலைகள் இடம் பெற்றுள்ளன.
* இந்தியாவில், காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு தற்போது 26 சதவீதமாக உள்ளது. இது விரை வில் 49 சதவீதமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் செயல்திறனில் அதிவேக முன்னேற்றம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
* சர்வதேச நிதி நெருக்கடியால் வெளிநாட்டினர் பலர் சிக்கனம் கருதி இந்திய நகரங்களில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களது பட்டியலில் சென்னை, டெல்லி மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே, கொல்கத்தா ஆகிய ஏழு நகரங்கள் முன்னணி வகிக்கின்றன. இந்த விவரங்களை இசிஏ இண்டர்நேஷனல் என்ற மனிதவள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
* கடந்த ஆண்டில் சொத்து மதிப்பின் அடிப்படையில் உலக அளவில் வலிமையான 1000 வங்கிகளை “தி பாங்க்கர்’ என்ற பத்திரிகை தர வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பட்டி யலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜே.பி. மார்கன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்தது.
* உலகின் மிகக்குறைந்த விலை மதிப்பில் தயாரான டாடாவின் நானோ கார்கள் முதல் இந்தியச் சாலைகளில் தனது பயணத்தைத் துவங்கியது. முதல் காரை தனது வாடிக்கை யாளருக்கு ரத்தன் டாடாவே நேரில் வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத் தார்.
* அமெரிக்காவின் வர்த்தக இதழான பார்ச் சூன், உலக அளவில் விரைவாக வளரும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட் டுள்ளது. இந்த பட்டியலில். பிளாக்பெர்ரி போன் தயாரிக்கும் கனடாவின் ரிசர்ச் இன் மோசன் முதல் இடம் பிடித்துள்ளது
* உலகிலேயே அதிக சம்பளம் பெறும் முதல் 25 பேரில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ள னர். அமெரிக்க இதழான பார்ச்சூன் வெளி யிட்ட இந்தப் பட்டியலில் மோட்டரோலா நிறுவன இணை தலைமை அதிகாரி சஞ்சய் ஜா ரூ.500 கோடி சம்பளத்துடன் 2-வது இடத்திலும், ரூ.183 கோடி சம்பளத்துடன் சிட்டி குழுமத் தலைமை அதிகாரி விக்ரம் பண்டிட் 14-வது இடத்திலும், ரூ.146 கோடி சம்பளத்துடன் ஹார்மன் இண்டர் நேஷனல் நிறுவன துணைத் தலைவர் தினேஷ் பாலிவல் 25-வது இடத்திலும் உள்ளனர்.
* உலகின் தலைசிறந்த ஐந்து நிர்வாகிகளின் பட்டியலை ஹார்வார்டு பல்கலைகழ கத்தின் ஹார்வார்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் தயாரித்துள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆப்பிள் நிறுவன நிர்வாகிகள் உள்ளனர். டாப்-50 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.