பிப்ரவரி 14 காதலர்தினம் - Febrauary 14 Valentines Day
ஆதலினால் ....காதல் செய்வீர்....
பிப்ரவரி 14 காதலர்தினம்.
உலகமுழுவதும் உள்ள காதலர்கள் தங்கள் அன்பை பகிர்ந்துக் கொள்ளப்போகிறார்கள்.
வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருட்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் என்று தங்கள் மகிழ்ச்சியை அன்பை பகிர்ந்துக் கொள்வார்கள். வயது வித்தியாசமில்லை.
ஆனால் வணிகமயத்தையே முன்னிலைப்படுத்தி இத்தினம் கொண்டாடப்படவதாக குற்றச்சாட்டு.
நமது கலாச்சாரத்தை சீரழித்துவிடும்.
இறக்குமதியான பண்பாட்டை நாம் கொண்டாட வேண்டுமா?
இக்கூக்குரல் யாருடையதாக இருக்கும்?
மதவாதிகள்.
பாலுணர்வை தூண்டும் இத்தினம் வேண்டுமா என்ற கூச்சல் காதை பிளக்கிறது.
கோயில்களின் கருவரையை கருவூட்டும் அறையாக மாற்றிய பார்ப்பனர்களின் குரல்தான் அது.
ஆர் எஸ் எஸ்,சங்கர்பரிவார்.. தாக்கரே.. சங்கராச்சாரி.. துக்ளக் சோ கும்பல்கள் தான் கலாச்சாரம் சீரழிந்து விட்டதாக கழுதைப் போல கத்துகிறார்கள்.
இவர்களுக்கு அடிப்படை. இந்துமதம்... இக்கட்டுமானம் வலுவாக இருக்க வேண்டும். இதற்கு சாதியம் வலுவானதாக கெட்டிக் கொண்டதாக இருந்தால்தான் அவாள்களுக்கு வசதி.
சாதியத்தின் அடிப்படை பார்ப்பனியம்..
பார்ப்பனியம் அடிமைத்தனத்தை தீண்டாமையை கட்டிக்காக்கிறது. இதை சிதைக்க விடலாமா என்று தான் கத்துகிறார்கள்.
காதலர் தினம் சாதியத்தை அசைக்கவே செய்கிறது.
அகமன முறையை அடிப்படையாக்க் கொண்ட சாதியை காதல் அத்துமீறவைக்கிறது.
இதுதான் பழமைவாதிகளின் மூளைக்குள் ஒரு புழுவைப்போல நெளிந்து கொண்டே இருக்கிறது.
உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறோம்.
அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று இக்காதல் தினத்திற்கும் சிவப்பு கம்பளம் விரிப்போம்.
வணிக நோக்கோடு இத்தினம் கொண்டாடப்பட்டாலும் கூட சாதியத்தை சிதைக்கும் வெடியாக இருப்பதால்
காதல் தினத்தை வரவேற்போம்.
வருக. பிப்ரவரி 14...
மனதுகளின் சங்கமம் மட்டுமில்லை
சாதிகளின் சங்கமங்களை மாலையிட்டு வரவேற்போம்.
வருக.. காதலர் தினமே வருக..