உத்தரவின்றி உள்ளே வா - காதல் காதல் என்று பேச பாடல்
by Sanju[ Edit ] 2010-02-09 22:24:30
உத்தரவின்றி உள்ளே வா
இளையராஜா?
பாடல்: காதல் காதல் என்று பேச
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுஷீலா
காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி (2)
மங்கல மங்கையின் நெஞ்சினில் பொங்கிய
மஞ்சள் நதியோ குங்கும நதியோ
(காதல்)
காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண்மைக்கு வழி தந்தது (2)
வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட
மன்னா வருக மாலை தருக
(காதல்)