உதய கீதம் - தேனே தென்பாண்டி மீனே
by Sanju[ Edit ] 2010-02-09 22:24:40
உதய கீதம்
இளையராஜா
பாடல்: தேனே தென்பாண்டி மீனே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ
(தேனே)
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
(தேனெ)
பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
(தேனே)