உன்னால் முடியும் தம்பி
இளையராஜா
பாடல்: என்ன சமையலோ
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா, சுனந்தா
என்ன சமையலோ என்ன சமையலோ
எடுத்துக் கேட்க யாருமில்லை என்ன சமையலோ
அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப்போனதே
என்னடி?...நாக்கு...மரத்துப்போனதே
அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே
அடியே...மோகனா...அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துப்பாரு
பேச்சை வள்ர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப்பாரடி...
சமைத்துக்காட்டுவோம்...
இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்
கல்யாணி...ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன் களைந்திடு அரிசியை
கல்யாணி...கல்...ச்...ஆணி...கவனி கல்யாணி
கமகமகம கமகமகம வாசம் வருதே
ம...சா...லா...கரம் மசாலா
கமகமகம கமகமகம வாசம் வருதே
சரிசரிசரி சரிசரிசரி விளையாட்டுகள் போதும்
கமக மதனி சாதம் ரெடியா
சாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி...அவியல் ரெடி...
சமையல் ரெடி அவியல் ரெடி வறுவல் ரெடி பொரியல் ரெடி
ததீங்கினதோம் ததீங்கினதோம்
சமையல் வேல முடிஞ்சி போச்சு முடிஞ்சி? போச்சு
இலையைப்போடடி பெண்ணே இலையைப்போடடி
சமைத்த உனவை ருசித்துப்பார்க்க இலையைப்போடடி
ஐய்யய்யோ...அப்பா வந்தாச்சு!
அப்பா வரும் நேரம் ச த ம க சாதமாக த ம த ம
அப்பா வரும் நேரம் சாதமாக தாமதமா
ராகம் வசந்தா நானும் ருசித்துப்பார்க்க ரசம் தா
பாடு வசந்தா...