பாடல்: ஏதோ ஒரு பாட்டு (பெண்) குரல்: சுஜாதா ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் (ஏதோ) என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் கலந்திருக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும் ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தேனூற்றும் ஞாபகங்கள் தீமூட்டும் (ஏதோ) அம்மா கை கோர்த்து நடைபழகிய ஞாபகமே தனியாய் நடைபழகி நான் தொலைந்தது ஞாபகமே புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே சின்னக் குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம் வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம் (ஏதோ) ரயில் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம் அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம் (ஏதோ) | பாடல்: ஏதோ ஒரு பாட்டு (ஆண்) குரல்: ஹரிஹரன் ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் (ஏதோ) கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம் அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம் (ஏதோ) தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம் மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம் (ஏதோ) |