உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
இளையராஜா
பாடல்: ஒரு மாலைச் சந்திரன்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், மின்மினி
பால் நெலவு சூரியன்போல் சுட்டதென்ன நியாயம்
பச்சக்கிளி தோளக்கொத்தி வந்ததிந்த காயம்
ஓடிவந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூட வழி இல்லையென்றே ஆனது பெண் பாவம்
ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ
(ஒரு மாலைச்)
வெண்ணிலவில் தேடுகின்றேன் கன்னி முகம் காணோம்
புன்னகையும் நானிழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தைப் பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
செம்மலையைப் போலிருந்தேன் தென்னிலங்கையானேன்
செல்லக் குயில் கூவ மெல்ல வரும் நேரம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதியாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி
(மாலைச்)
நித்திரையில் பூவெடுத்தேன் நெஞ்சில் ஒரு காயம்
காயம் கொண்ட போதினிலும் பூவில் எந்தன் மோகம்
தெற்குக் கடல் ஆழத்திலே முத்தெடுக்கப் போனேன்
மூச்சடங்கிப் போனதடி முத்தை இன்னும் காணேன்
உந்தன் முகம் தேடி உள்ளம் அலை பாயும்
தென்றலின்றிப் போனால் தேகம் அனலாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி
(மாலைச்)