உல்லாசப் பறவைகள் - ஜெர்மெனியின் செந்தேன் மலரே
by Sanju[ Edit ] 2010-02-09 22:26:30
உல்லாசப் பறவைகள்
இளையராஜா
பாடல்: ஜெர்மெனியின் செந்தேன் மலரே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கன்ன அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மரந்தேன்
(ஜெர்மெனியின்)
பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா லா லா குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா லா லா எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
(சித்திரமே)
பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
லா ல லா லா லா
லா ல லா லா லா
வெகு நாளாக ஆசை
உன் தோளில் பூமாலை போலாட வந்தேன்
நீ சொல்லும் நேரம் சொர்க்கம்
(ஜெர்மெனியின்)