கலைமகள் கைப் பொருளே

by savitha 2010-02-06 15:37:12

கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ

நான் யார் உன்னை மீட்ட - வரும்
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
ஏனோ துடிக்கின்றேன் - ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்

சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்திய தர்மங்கள் நிலைக்கட்டுமே - இந்தத்
தாய்மையின் குரலும்தான் ஒலிக்கட்டுமே

Tagged in:

1710
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments