இது மாருதியின் வெற்றிக் கதை!

by Sanju 2010-02-06 15:55:51

இது மாருதியின் வெற்றிக் கதை!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.சி. பார்கவா, மாருதி நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் சாதனை, இந்தியாவில் அது ஏற்படுத்திய தாக்கம், அதன் வெற்றி ஆகியவற்றைப் பற்றி தி மாருதி ஸ்டோரி என்ற பெயரில் புத்தகமாக வடித்துள்ளார்.

மாருதி கார்கள் நாட்டின் சாலைகளை வலம் வரத் தொடங்கிய புதிதில் அதன் இலக்கு மிகப் பெரியதாக இருந்துது. மேலும் அதை சாதிக்க முடியுமா என்ற சந்தேகமும் அனைவருக்கும் இருந்தது.

முதலில் மாருதி நிறுவனத்திற்கான பார்ட்னரை தேடும் பணி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நடந்தது. இதுதொடர்பான ஒப்பந்தங்கள், அரசின் அனுமதியைப் பெறுவது, பேக்டரி அமைப்பது, உள்ளூர் தேவைகளுக்கேற்ற வடிவங்களை உருவாக்குவது, விற்பனையாளர்களை ஒருங்கிணைப்பது, சர்வீஸ் கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தபோது மாபெரும் பிரமிப்பே ஏற்பட்டது.

அதுவரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இவ்வளவு பெரிய கார் நிறுவனம் ஒன்று இருந்ததில்லை. அதுவே மிகப் பெரிய சாதனை. அதை விட முக்கியமானது அரசு நிறுவனம் ஒன்று தனியார் நிறுவனத்துடன் இணைந்து கார் தயாரிப்பில் கால் பதித்ததும் மிகப் பெரிய சாதனையாகும்.

இப்படி பல தடைகள், உழைப்புகளின் விளைவாக 1983ம் ஆண்டு மாருதி கார்கள் இந்திய சாலைகளில் ஓடத் தொடங்கின.

இந்திய கார் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது மாருதி. நாட்டின் சாலைகளில் மாருதியின் ஓட்டம் அதிகரித்தது. நாடே மாருதியின் பின்னால் ஓடத் தொடங்கியது.

அதுவரை காரை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு நாமும் ஒரு மாருதி வாங்கினால் என்ன என்ற எண்ணத்தை விதைத்தது மாருதி நிறுவனத்தின் தாக்கம்.

இப்படி நடுத்தர இந்திய மக்களின் கார் கனவை முதன் முதலில் நனவாக்கிய பெருமை படைத்தது மாருதி. இப்போது மாருதி நிறுவனம், அரசின் பிடியில் இல்லை. உலகின் மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலைக்கு உயர்நதுள்ளது.

இருந்தாலும் கூட மாருதிக்கு மக்கள் மனதில் தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. மாருதியின் தயாரிப்புகள் இன்று அனைத்துப் பகுதிகளிலும் இடம் பெற்று அதன் தாக்கத்தை தெளிவுபடுத்துகின்றன.

மாருதியின் பிறப்பும், அதன் வளர்ச்சியும் பெரும் சாதனை படைத்தவை, பிரமிப்பூட்டுபவை. அதை மாருதியின் முன்னாள் தலைவரான ஆர்.சி. பார்கவா மூத்த பத்திரிக்கையாளரும், நூலாசிரியருமான சீதாவுடன் இணைந்து இந்த நூலில் அழகாக விவரித்துள்ளார்.

ஒரு மாபெரும் சாதனை வரலாற்றின் பதிவு இது.
2062
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments