உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் காஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்
வெக்கப்படப்பில் கவுளி காத்த வலது பக்கம் கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ