கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தனத் தென்றலை

by Sanju 2010-02-09 22:29:14

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஏ ஆர் ரஹ்மான்
(2000)

பாடல்: சந்தனத் தென்றலை
குரல்: ஷங்கர் மஹாதேவன்
வரிகள்: வைரமுத்து

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா

என்ன சொல்லப் போகிறாய்

Tagged in:

1570
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments