கண்ணுக்குள் நிலவு - எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன்

by Sanju 2010-02-09 22:30:05

கண்ணுக்குள் நிலவு
இளையராஜா
(1999)

பாடல்: எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன்
குரல்: உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: பழனி பாரதி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி...ஒ ஒ ஒ ஓ...
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி...ஒ ஒ ஒ ஓ...
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே...ஒ ஒ ஒ ஓ...
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்...ஒ ஒ ஒ ஓ...
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும் (2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

Tagged in:

1835
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments