கண்ணுக்குள் நிலவு
இளையராஜா
(1999)
பாடல்: இரவு பகலைத் தேட
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: பழனி பாரதி
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ...
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட