கண்ணுக்குள் நிலவு
இளையராஜா
(1999)
பாடல்: சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
குரல்: சித்ரா
வரிகள்: பழனி பாரதி
சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்
புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ
சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
பகல் நேரத்திலும் நிலா கேட்குமுந்தன் கண்ணில் நிலவு குடியிருக்கும்
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேந்துளிகள் அமுதாய் அமுதாய் அது இனிக்கும்
நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்
நீ பார்த்தல் மணி தீபங்கள் என் நெஞ்சிலாடும் அறிவாயோ
சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
என்னை அன்னையென்றால் வரம் அள்ளித் தந்தால் மகனாய்ப் பிறந்து தவம் முடிப்பாய்
விழி தேடி மடி ஆடி நின்று எறியும் விளக்காய் ஒளி குடுப்பாய்
உன் நிழலும் என் மகன் போலப் பாலூட்டக் கேட்க்கும்
தாலாட்டும் இந்த சொந்தங்கள் எப்போதும் வேண்டும் ஆராரோ...