கலங்கரை விளக்கம் - நான் காற்று வாங்கப் போனேன்
by Sanju[ Edit ] 2010-02-09 22:30:42
கலங்கரை விளக்கம்
பாடல்: நான் காற்று வாங்கப் போனேன்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான் காற்று)
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான் காற்று)
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான் காற்று)
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
(நான் காற்று)