கலங்கரை விளக்கம் - என்னை மறந்ததேன் தென்றலே

by Sanju 2010-02-09 22:30:45

கலங்கரை விளக்கம்

பாடல்: என்னை மறந்ததேன் தென்றலே
குரல் சுசீலா
வரிகள்: கண்ணதாசன்


என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா

காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கனியாக மாறாதோ

கலையாத காதல் நிலையானதென்று அறியாமல் சொல்லிவைத்தாயோ - உன்னை
அறியாத பெண்ணின் மனவாசல் கண்டு திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ

கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம் கனியாக மாறாதோ

(என்னை)

Tagged in:

1801
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments