காதல் கவிதை - டயானா டயானா
by Sanju[ Edit ] 2010-02-09 22:33:10
காதல் கவிதை
இளையராஜா
பாடல்: டயானா டயானா
குரல்: ஹரிஹரன், குழுவினர்
வரிகள்: அகத்தியன்
நானா நானா...டயானா டயானா (2)
நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது
நானா நானா...டயானா டயானா (2)
இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
காதலான தாயே வாழ்கவே...
நானா நானா...டயானா டயானா (2)
மாலைப் பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ லலலலா...
நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ லலலலா...
காணும் காட்சி யாவும் காதல் சொல்லுதே...
வானம் பூமி காதல் வாசம் வீசுதே
காலத்தை வெல்கின்ற காதல்கள் வாழட்டும்
வா வெண்ணிலா...
நானா நானா...டயானா டயானா (2)
வானில் மின்னும் வெள்ளி மீனே காற்றுத் தருவாய்
காணும் கண்களுக்குள் பாவை ஆகிவிடுவாய்
பாவை இன்றிப் பார்வை கண்ணில் ஏதடி
பாவை இன்றிக் காதல் வாழ்வில் ஏதடி
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்
வா வெண்ணிலா...
நானா நானா...டயானா டயானா (2)
(நீ தூங்கும்)