காதல் மன்னன் - உன்னைப் பார்த்த பின்பு நான்

by Sanju 2010-02-09 22:33:34

காதல் மன்னன்
பரத்வாஜ்

பாடல்: உன்னைப் பார்த்த பின்பு நான்
குரல்: ஸ்.nகு பாலசுப்ரமணியம்


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
(உன்னை)

(உன்னை)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் ஞாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமைய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ இல்லைக் கரைவாயோ

(உன்னை)

Tagged in:

1686
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments