காதல் வேதம்
உத்பல் பிஸ்வாஸ்
பாடல்: மலையும் நதியும் நிலமும் ஒருனாள்
குரல்: ஹரிஹரன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு
வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு
பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா
சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு
முள்ளிலே கிடந்தாலும் ஆணிமேல் நடந்தாலும் (2)
கண்மணி மெய் தீண்டினால் காயங்கள் பூவாகும்
காதலி கண் ஜாடையில் சிலுவையும் சிறகாகும்
எந்த மாதமும் பௌளர்ணமியே தேயாதிரு அங்குலமும் நீங்காதிரு
வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு
வண்டு வந்து தேனுண்டால் பூவின் வலி யார் கண்டார்
நேசம் மட்டும் நீ கண்டால் நெஞ்சின் வலி யார் கண்டார்
பூக்களில் கண்ணீர்த்துளி பொங்குதே யார் தந்தார்
சிந்திய கண்ணீரிலும் உன்முகம் தானாடுது
காதல் ஒரு போர் போன்றது என்பதே நான் கண்டது
கண்கள் கேட்குதே காதலனே பிரியாதிரு கண்திரையில் மறையாதிரு
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு
சூரியனும் அணைந்தாலும் சந்திரனும் அவிந்தாலும் (2)
உன் கண்ணில் சந்திரனுண்டு இரவோடு வலம் வருவேன்
மறு கண்ணில் சூரியனுண்டு பகலோடு வலம் வருவேன்
உந்தன் கண்களை காதலியே மூடாதிரு கையருகே நீங்காதிரு
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு நீயென்றும் பிரியாதிரு