காதல் வேதம் - அழகான காதல் நிலா
by Sanju[ Edit ] 2010-02-09 22:33:47
காதல் வேதம்
உத்பல் பிஸ்வாஸ்
பாடல்: அழகான காதல் நிலா
குரல்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
அழகான காதல் நிலா அடிவானில் வாவென்றதே
அடிவானில் நான் ஏறினேன் கடலோடு அது வீழ்ந்ததே
கடலோடு நான் மூழ்கினேன் கரை சேர்ந்த அலையானதே
(அழகான)
நம் பூமி கடல்போன்றது நம் வாழ்வு அலை போன்றது
நம் காதல் உறவானது அலைமீது குமிழ் போன்றது
குமிழோடு குடியேறவே குறை நெஞ்சு கூத்தாடுது
(அழகான)
ஆ...ஆ...ஆ...ஆ...
அலைகின்ற பூங்காற்றிலே அவள் சுவாசம் நான் தேடவோ
அழிகின்ற மணல் மேட்டிலே அவள் பாதம் நான் காணவோ
கண்தூங்க முடியாமலே கனவோடு நான் வாழவோ
(அழகான)