காற்றினிலே வரும் கீதம் - கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
by Sanju[ Edit ] 2010-02-09 22:41:01
காற்றினிலே வரும் கீதம்
இளையராஜா
பாடல்: கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
குரல்: ஜெயசந்திரன், எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் (2)
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் (2)
தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல் தொட்டில்கட்டியாடும் உள்ளம் (2)
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அங்கே அன்று இங்கே இன்று
(கண்டேன்)
வனக்கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவளுது முல்லை தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
தனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
(கண்டேன்)
கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்
(கண்டேன்)