கிழக்குச் சீமையிலே
ஏ ஆர் ரஹ்மான்
(1994)
பாடல்: ஆத்தங்கர மரமே அரசமர இலையே
குரல்: மனோ, சுஜாதா
வரிகள்: வைரமுத்து
அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சொமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நெலவானதெப்போ
மௌளனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ
ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே (2)
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
(ஆத்தங்கர)
மாமனே ஒன்னத் தாங்காம ஒட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே
(ஆத்தங்கர)
தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா
பாரையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா (2)
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா
மாமம்பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு
(ஆத்தங்கர)