கிழக்குச் சீமையிலே - தென்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில

by Sanju 2010-02-09 23:06:29

கிழக்குச் சீமையிலே
ஏ ஆர் ரஹ்மான்
(1994)

பாடல்: தென்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
குரல்: மலேசியா வாசுதேவன், சித்ரா
வரிகள்: வைரமுத்து


தென்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்குக் கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலும் மேகம் நேரம் இருக்கு

(தென்கிழக்குச்)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பாத்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்குக் குஞ்சு மேல கோபம் வல்லையே
ஒம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே

(தென்கிழக்குச்)

செங்காட்டு மண்ணும் நம்வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரக் கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீரிப் போக சக்தி இல்லையே
பாசத்த பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு எளகிப் போச்சு வெட்டுப் பாறையே

(தென்கிழக்குச்)

Tagged in:

1592
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments