குலமகள் ராதை - இரவுக்கு ஆயிரம் கண்கள்
by Sanju[ Edit ] 2010-02-09 23:06:53
குலமகள் ராதை
கே வி மஹாதேவன்
பாடல்: இரவுக்கு ஆயிரம் கண்கள்
குரல்: பி சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று (2)
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று (2)
(இரவுக்கு)
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று (2)
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி (2)
(இரவுக்கு)
அங்கும் இங்கும் அலைபோலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே (2)
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரிவார் (2)
(இரவுக்கு)