கேளடி கண்மணி - வாரணமாயிரம் சூழ வலம் செய்து
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:01
கேளடி கண்மணி
இளையராஜா
பாடல்: வாரணமாயிரம் சூழ வலம் செய்து
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: ஆண்டாள்!
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்
தோழி நான் கனாக்கண்டேன்
மத்தளம் கொட்ட வரிச் சங்கம் நின்றூத
முத்துடைத்தாய் நிறைத் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தெமை
கைத்தலம் பற்ற கனாக்கண்டேன்
தோழி நான் கனாக்கண்டேன்