கை கொடுத்த தெய்வம் - சிந்து நதியின் மிசை நிலவினிலே
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:07
கை கொடுத்த தெய்வம்
பாடல்: சிந்து நதியின் மிசை நிலவினிலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: சுப்ரமணிய பாரதி
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகல் ஓட்டி விளையாடி வருவோம்
(மனசிதி நீகோசம் மதுகட நீகோசம்
மமதா வேதா மாயனி மதுகாசம்)
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
(சிந்து நதி)
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
வையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்
(சிந்து நதி)