கோடீஸ்வரன் - தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:23
கோடீஸ்வரன்
ஆகோஷ்)
பாடல்: தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
குரல்: ஹரிஹரன்
ம்ம்ம்ம்...தனனனனா...
தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ நடந்து போ கூட என் நிழல் வரும்
தொலைவினிலே...
பொன்வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உனைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா
(தொலைவினிலே)
நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்
(தொலைவினிலே)