கோபுர வாசலிலே
இளையராஜா
(1991)
பாடல்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
Eஸ்! ள்V HS DO! ள்V HS ள்VAL DO!
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இதம் தரும்
(காதல்)
கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனிக் கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்)
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒருனாள் பலனாள் தொடர்ந்தாள் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம்
(காதல்)