கோபுர வாசலிலே - பிரியசகி ஓ பிரியசகி
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:34
கோபுர வாசலிலே
இளையராஜா
(1991)
பாடல்: பிரியசகி ஓ பிரியசகி
குரல்: மனோ, எஸ் ஜானகி
பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
(பிரியசகி)
காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்
வானமும் வையமும் வாழ்த்துமே ஓ
பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி
வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
கூண்டிலே காதல் குயில் பாடுது பாடுது
கொண்டுபோ கூவி உனைத் தேடுது தேடுது
வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதா வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ
(பிரியசகி)