கோபுர வாசலிலே - தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:40
கோபுர வாசலிலே
இளையராஜா
(1991)
பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
குரல்: எஸ் ஜானகி
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
(தாலாட்டும்)
நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
(தாலாட்டும்)
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா
(தாலாட்டும்)