கோயில் புறா - அமுதே தமிழே அழகிய மொழியே
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:44
கோயில் புறா
இளையராஜா
பாடல்: அமுதே தமிழே அழகிய மொழியே
குரல்: சுசீலா, உமா ரமணன்
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2)
சுகம் பல தரும் தமிழ்ப்பா (2)
சுவையோடு கவிதைகள் தா (2)
தமிழே நாளும் நீ பாடு (2)
(அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் (2)
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் (2)
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் (2)
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது (2)
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)