பாடல்: வேதம் நீ இனிய நாதம் நீ
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி?
வேதம் நீ இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் (2)
(வேதம் நீ)
கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய் (2)
இளைய தென்றல் காற்றினிலே...
இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்
(வேதம் நீ)
அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய் (2)
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ (2)
மனமும் குணமும் தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடி உன் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது
நித்தம் புது சித்தம் பெற இசைத்தமிழ் வடித்தது
இசையில் உனது இதயம் மகிழும் மணம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது குறுனகை விரியுது விரியுது
விழிக் கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்