கோழி கூவுது - ஏதோ மோகம் ஏதோ தாகம்
by Sanju[ Edit ] 2010-02-09 23:07:58
கோழி கூவுது
இளையராஜா
பாடல்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
குரல்: கிருஷ்ணசந்தர், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனக்கல்லையே ஆச வெத மொளக்கல்லையே
சேதி என்ன வனக்கிளியே
(ஏதோ)
தாழம் பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு (2)
சூடு கொண்டு ஈரமூச்சு தோளக் கொத்தக் காயமாச்சு (2)
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு (2)
போதும் போதும் காதல் தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
(ஏதோ)
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து (2)
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் கூத்து
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்குமேல தண்ணி ஊத்து (2)
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேலையில் நெஞ்சு தாவுது
(ஏதோ)