குண்டக்க மண்டக்க – 20
முன்பே பலர் படித்த நகைச்சுவை தான். பார்த்திபன் - வடிவேலு கூட்டனியில் இந்த நகைச்சுவை எப்படி இருக்கிறது என்ற ஒரு சிறு கற்பனை.
பார்த்திபன் - மேனேஜர்,
வடிவேலு - பார்த்திபனிடம் வேலை செய்பவன்.
5 வருஷமா வேலை செஞ்சதுக்கு சம்பள உயர்வுக்காக பார்த்திபனிடம் வடிவேலு கேக்குறான்...)
வடிவேலு : எனக்கு சம்பள உயர்வு வேணும்..
பார்த்திபன் : நீ இங்க ஒரு நாள் கூட வேலையே செய்யல நான் எப்படி உனக்கு சம்பள ம் தர முடியும்
வடிவேலு : என்னது... நான் ஒரு நாள் கூட வேலையே செய்யலையா...?
பார்த்திபன் : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள்...?
வடிவேலு : 365 நாளு.... நாலு வருஷத்துக்கு ஒரு வாட்டி 366 நாளு...
பார்த்திபன் : ஒரு நாளுக்கு எத்தன மணி நேரம் ?
வடிவேலு : 24 மணி நேரம்
பார்த்திபன் : ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வே....
வடிவேலு : காலையில 10 மணியில இருந்து சாய்ந்திரம் 6 மணி வரைக்கும்... அதாவது 8 மணி நேரம் வேலை செய்றேன்....
பார்த்திபன் : அதாவது ஒரு நாளைக்கு மூனுல ஒரு பங்கு ( 8/24=1/3) வேலை செய்யுற...
வடிவேலு : ஆமா...
பார்த்திபன் : சரி.... அப்போ ஒரு வருஷத்துக்கு 366 நாளுல மூனுல ஒரு பங்கு எவ்வளவு ...?
வடிவேலு : 122 நாளு... ( 1/3 * 366 =122)
பார்த்திபன் : சனி, ஞாயிறுக்கிழமை வேலைக்கு வரியா...?
வடிவேலு : இல்ல...
பார்த்திபன் : ஒரு வருஷத்துக்கு அத்தனை சனி, ஞாயிறு வருது...?
வடிவேலு : 52 சனி கிழம, 52 ஞாயிறு கிழம... மோத்தம் 104 நாள் வருது..
பார்த்திபன் : அப்போ 122 நாளுல.... 104 நாள் கழிச்சிடு...
வடிவேலு : 18 நாள் வருது....
பார்த்திபன் : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள் லீவ் தராங்க...
வடிவேலு : ரெண்டு வாரம்.... 14 நாள்
பார்த்திபன் : சரி... 18 நாளுல.... 14 நாள் கழிச்சிக்கோ... எவ்வளவு வருது...?
வடிவேலு : 4 நாள்....
பார்த்திபன் : சுதந்திர தினம், குடியரசு தினம் வேலை செய்யுரியா....
வடிவேலு : இல்ல...
பார்த்திபன் : 4 நாள... 2 நாள் கழிச்சிக்கோ
வடிவேலு : 2 நாள் வருது...
பார்த்திபன் : தீபாவளி, பொங்கல் அன்னைக்கு வேலை செய்யுரியா....
வடிவேலு : இல்ல....
பார்த்திபன் : இப்போ... அந்த 2 நாளையும் கழிச்சிக்கோ
வடிவேலு : கழிச்சாச்சு..
பார்த்திபன் : இப்போ... எத்தன நாளு இருக்கு...
வடிவேலு : எல்லா நாளும் கழிஞ்சிடுச்சு...
பார்த்திபன் : இப்போ சொல்லு நான் எதுக்கு உனக்கு சம்பளம் தரனும்...
வடிவேலு : ஆ.....
பார்த்திபன் : நியாயமா பார்த்தா நான் உனக்கு சம்பளமே தர கூடாது.. போனா போது கொடுத்துட்டு இருக்கேன்...
வடிவேலு : ரொம்ப நன்றி.... இவ்வளவு நாள்... கம்பெனி சும்மா எனக்கு சம்பளம் தராங்கனு தெரியாம போச்சு... மன்னிச்சிடுங்க... நான் வரேன்..
வடிவேலு : (மனசுக்குள்) வேலைய விட்டு தூக்கிடுவாங்கனு பயமுருத்தியே சம்பள உயர்வ கொடுக்காமா இருக்காங்களே...