சங்கமம் - மழைத்துளி மழைத்துளி

by Sanju 2010-02-10 07:43:53

சங்கமம்
ஏ ஆர் ரஹ்மான்
(1999)

பாடல்: மழைத்துளி மழைத்துளி
குரல்: ஹரிஹரன், எம் எஸ் விஸ்வனாதன்
வரிகள்: வைரமுத்து


மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி)

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

(மழைத்துளி)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லுய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே...
காற்றுக்கு ஓய்வென்பதேது...அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது...கிடையாது

(ஆலாலகண்டா)

Tagged in:

1386
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments