சலங்கை ஒலி - தகிட ததிமி தகிட ததிமி தம்தானா

by Sanju 2010-02-10 07:49:24

சலங்கை ஒலி
இளையராஜா

பாடல்: தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து


தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர

(தகிட)

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளினீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

அ அ அ...

(தகிட)

பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை

(தகிட)

Tagged in:

1536
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments