சின்னஞ்சிறு கிளியே .. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா செல்வக் களஞ்சியமே! என்னை கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! பிள்ளை கனியமுதே, - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி அணைத்திடவே - என் முன்னே ஆடி வரும் தேனே ஓடி வருகையிலே - கண்ணம்மா உள்ளம் குளிரு தடி! ஆடிதிரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடி! உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடி! மெச்சி உன்னை ஊரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்கு தடி! கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடி! உன்னை தழுவிடில - கன்னமா உன்மத்த மாகு தடி! சற்று முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடி! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடி! உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் உதிரம் கொட்டு தடி! என் கண்ணில் பார்வயன்றோ? - கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ ? சொல்லும் மழலையிலே - கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்: முல்லை சிரிப்பாலே - எனது மூர்க்கம் தவிர்த்திடு வாய். இன்ப கதைகள் எல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ ? அன்பு தருவதிலே - உன்னைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ? மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிகள் லுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிரிது முண்டோ? --பாரதியார் | chinnanchiru kiliye.. chinnanchiru kiliye - kannamma selva kalanjiyame ennai kalitheerthe - ulagil yetram puriyavandhai pillai kaniyamudhe - kannamma pesum porchithirame alli anaithidave - yenmunne aadivarum thene odi varugayile - kannamma ullam kulirudhadi aadi thiridhal kandal - unnai poi aavi thazhuvudhadi ucchi dhanai mugandhal - garuvam ongi valarudhadi mecchi unai oorar - pugazhndhal meni silirkudhadi kannathil muthamittal - ullanthan kallveri kolludhadi unnai thazhuvidilo - kannama unmatham aagudhadi satrun mugam sivandhal - manadhu sanchalam aagudhadi netri churukam kandal - enakku nenjam padhaikudhadi unkannil neer vazhindhal - en nenjil udhiram kottudhadi en kannil paarvayandro? - kannamma en uyir ninnadhanro? sollum mazhalayile - kannamma thunbangal theerthiduvai mullai siripaale - enadhu moorgam thavirthiduvai inba kadaigal yellaam - unnaipol yedugal solvadundo? anbu taruvadile - unnainer aagumor daiva mundo? maarbil anavadarke - unnaipol vaira manika lundo? seerpetru vaazhavadarke - unnaipol selvam piridu mundo? (cinnanjiru) -- Bharathiyar |