சுரைக்காயைக் கொண்டு வைத்தியம்
by Rameshraj[ Edit ] 2010-02-12 10:11:45
சுரைக்காயைக் கொண்டு வைத்தியம் :
சுரை விதை, வெள்ளரி விதை, தர்பூசணி விதை, முலாம்பழ விதை இவற்றை சம அளவு எடுத்து நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து நீர் விட்டுக் கஞ்சி போல காய்ச்சி உட்கொள்ள கொடுத்து வர வேண்டும்.
இவ்வாறு கொடுத்து வந்தால் சிறு நீரை நன்கு பெருகச் செய்து நீர் எரிச்சல், கல்லடைப்பு, பெருவயிறு போன்றவைகளைக் குணமாக்கும்.
சுரைவிதை, கருஞ்சீரகம், சீரகம், திப்பிலி, வெட்பாலைப் பட்டை, சுத்தி செய்த நேர்வாளம், வெடியுப்பு சுண்ணம் போன்றவற்றை சம அளவு எடுத்து கற்றாழைச்சாறு, பருத்தி இலைச்சாறு விட்டு நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவு உருட்டி உலர்த்திக் கொள்ளவும்.
இதனை சுரைத்தண்டு குடிநீரில் உட்கொள்ள கல்லடைப்பு, நீரடைப்பு, சதையடைப்பு, வெள்ளை நோய் போன்றவை குணமாகும்.
சுரைக்கொடி கஷாயத்தை சிறுநீர்க் கட்டுப்படல், பெரு வயிறு, உடல் வீக்கம் முதலிய நோய் உள்ளவர்களுக்கு கொடுத்து வர சிறுநீரை நன்கு கழியச் செய்து நோயை குணமாக்கும்.