எளிய வீட்டு வைத்தியம்
by Rameshraj[ Edit ] 2010-02-12 10:13:07
எளிய வீட்டு வைத்தியம்:
சுரைக்கொடி, நீர்முள்ளி, நெருஞ்சில், திரிபாலா, சோம்பு, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், பறங்கிப்பட்டை, சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
இதில் சிறிது தூளை நீரிலிட்டுக் காய்ச்சி பாதியாக வற்ற வைத்து குடித்து வர நீர்க்கட்டு சோபை, நீர் எரிச்சல், பெரு வயிறு, கல்லடைப்பு பிரச்சினைகள் குணமாகும்.
சுரைக்கொடி, நீர்முள்ளி, வெள்ளரி விதை - இவை மூன்றையும் சம அளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை குணமாகும்.
சுரை இலை, சுக்கு இரண்டையும் நீர்விட்டு நன்கு அரைத்து 3 வேளை உட்கொள்ள மலத்தை இளக்கி வெளிப்படுத்தும்.
சுரைக் குடுக்கையை சுட்டு சாம்பலாக்கி, அதில் 4 கிராம் அளவு எடுத்து, அதை 80 மில்லி பசுமோரில் கலந்து இருவேளை குடித்து வர பாதரசத்தால் ஏற்பட்ட நச்சுத்தன்மை குணமாகும்.