உட‌லி‌ல் ‌நீ‌ர் தே‌க்க‌த்தை ‌சீரா‌க்கு‌ம்.

by Rameshraj 2010-02-12 10:14:23

உட‌லி‌ல் ‌நீ‌ர் தே‌க்க‌த்தை ‌சீரா‌க்கு‌ம்.

க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு கா‌லி‌ல் ‌நீ‌ர் தே‌ங்‌கி ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். ‌சிறு‌நீரக ‌பிர‌ச்‌சினை ‌உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌ம் ‌சிறு‌நீ‌‌ர் ‌பி‌ரிவ‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு சுரை‌க்கா‌ய் ந‌ல்ல பலனை‌த் தரு‌ம்.

சுரை‌க்காயை சமை‌த்து உ‌ண்ண உட‌ல் ‌வீ‌க்‌க‌ம் குறையு‌ம். ‌சிறு‌நீ‌ர் ‌அ‌திகமாக இற‌ங்கு‌ம். இதை சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல் க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ளு‌க்கு ஏ‌ற்ப‌ட்ட பாத ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.

சுரை‌க்கொடியை பூ‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தாலோ அ‌ல்லது கொடியை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி கஷாயமா‌க்‌கி‌க் குடி‌த்து வ‌ந்தாலோ, உட‌லி‌ல் த‌ங்‌கிய ‌நீரை வெ‌ளியா‌க்‌கி, உட‌ல் ‌‌வீ‌க்க‌த்தை குறை‌க்கு‌ம்.

சுரை‌க்கொடி கஷாய‌த்தை ‌சிறு‌நீ‌ர்‌க் க‌ட்டு‌ப்பட‌ல், பெரு வ‌யிறு, உட‌ல் ‌வீ‌க்க‌ம் முத‌லிய நோ‌ய் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு கொடு‌த்து வர ‌சிறு‌நீரை ந‌ன்கு க‌ழிய‌ச் செ‌ய்து நோயை குணமா‌க்கு‌ம்.

பொதுவாக சுரை‌க்காயை கூ‌ட்டு வை‌த்து சா‌ப்‌பிடலா‌ம். அ‌ல்லது சுரை‌க்கா‌ய் போ‌ட்டு சா‌ம்பா‌ர் வை‌த்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம். சுவையாக இரு‌க்கு‌ம்.
1605
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments