சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து
by Rameshraj[ Edit ] 2010-02-12 10:18:41
சிலருக்கு மழைக்காலத்திலும், பலருக்கு எப்போதுமே காலில் சேற்றுப் புண் ஏற்படுகிறது. எப்போதும் தண்ணீரில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப் புண் ஏற்படுகிறது.
சேற்றுப் புண்ணைத் தவிர்க்க மருதாணி நல்ல மருந்தாக உதவுகிறது.
மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து இரவில் சேற்றுப் புண் உள்ள இடங்களில் பற்றுப் போல் போட்டு விடுங்கள். மிகவும் குளிர்ச்சியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் லேசாகத் தடவிக் கொண்டால் போதும். ஏனெனில் மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திவிடும்.
காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் சேற்றுப்புண் குணமாகிவிடும். மேலும் சேற்றுப்புண் வராமல் இருக்க வேண்டும் என்றால், தண்ணீரில் நின்று வேலை செய்யும் போது காலில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.
இவ்வாறு செய்தால் நிரந்தரமாக சேற்றுப்புண் வராமல் தடுக்கலாம்.