மஞ்சளின் மகிமையை அறிவோம்
by Rameshraj[ Edit ] 2010-02-12 10:19:44
மஞ்சளின் மகிமையை அறிவோம்:
மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு குடித்தால், அவ்வப்போது சளியால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்.
சளி பிடித்து இருமலும் இருந்தால், ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும், ஒரு சிட்டிகை மிளகுத் தூளும் போட்டுக் குடிக்கலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.
வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.
மஞ்சள் நல்ல கிருமி நாசினியாகப் பயன்படும். எனவே, அசைவப் பொருட்களை ஒரு முறை மஞ்சள் தூள் போட்டு கழுவிவிட்டு பிறகு சமைக்கலாம்.